NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் மகளிருக்கு ரூ.1000 மாதாந்திர கௌரவத் தொகை திட்டத்தை தொடங்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் மகளிருக்கு ரூ.1000 மாதாந்திர கௌரவத் தொகை திட்டத்தை தொடங்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம்
    டெல்லியில் மகளிருக்கு ரூ.1000 மாதாந்திர கௌரவத் தொகை திட்டம் விரைவில் தொடக்கம்

    டெல்லியில் மகளிருக்கு ரூ.1000 மாதாந்திர கௌரவத் தொகை திட்டத்தை தொடங்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 07, 2024
    08:42 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1000 மாதாந்திர கௌரவத் தொகையை வழங்கும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் லட்சிய முயற்சியான முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜ்னா திட்டம் பட்ஜெட் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

    வரவிருக்கும் நிதியாண்டில் சாத்தியமான பற்றாக்குறையை மேற்கோள் காட்டி, திட்டத்தின் நிதி நம்பகத்தன்மை குறித்து நிதித் துறை கவலை தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2024-25 பட்ஜெட்டில் ₹2,000 கோடி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தால் சுமார் 45 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட கணிப்புகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மொத்தம் ₹4,550 கோடி தேவை என்று மதிப்பிடுகிறது.

    இத்தகைய செலவுகள் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும், இது 2025-26இல் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும் நிதித் துறை எச்சரித்துள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால்

    திட்டத்தை செயல்படுத்துவதில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

    இந்தக் கவலைகள் இருந்தபோதிலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது பாதயாத்திரை பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தொடர்ந்து உறுதியளித்தார்.

    இந்த திட்டத்திற்கான பதிவு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் சமீபத்தில் கூறினார்.

    டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஏற்கனவே ஒரு வரைவு முன்மொழிவை நிதித் துறைக்கு மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்துள்ளது.

    ஆரம்பத் திட்டங்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் 2024க்குள் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன.

    ஆனால் நடைமுறை தாமதங்கள் அதைச் செயல்படுத்துவதைத் தள்ளிவிட்டன.

    2025 பிப்ரவரியில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இதை செயல்படுத்துவதில் ஆம் ஆத்மி தீவிரமாக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆம் ஆத்மி
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆம் ஆத்மி

    "ED என்னை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இது ஒரு மோசடி": நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்
    திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது? அரவிந்த் கெஜ்ரிவால்
    சிறைவாசத்தால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் குன்றியது, உடல் எடை குறைந்தது: ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால்
    கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்' அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லி

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 20 வரை நீட்டிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    பிக்பாஸ் போட்டியாளரை நம்பி மோசடியில் சிக்கிய பொதுமக்கள்; எக்ஸ் தளத்தில் இதுதான் ட்ரெண்டிங் யூடியூபர்
    இந்தியா முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் வேலைநிறுத்தம்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    'நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்': இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்து பேசினார் ராகுல் காந்தி டெல்லி
    ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு  டெல்லி
    மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025