Page Loader
உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம்
தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் உத்தரகாண்ட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் கனமழை: கடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கல்லூரி கட்டிடம்

எழுதியவர் Sindhuja SM
Aug 14, 2023
02:40 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்டில் பெய்த கனமழையால், டேராடூனின் மால்தேவ்தாவில் உள்ள டூன் பாதுகாப்பு கல்லூரியின் கட்டிடம் இன்று(ஆகஸ்ட் 14) இடிந்து விழுந்தது. கடந்த 24 மணி நேரமாக உத்தரகாண்டில் பெய்த தொடர் மழையால் பந்தல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டேராடூன், நைனிடால் உள்ளிட்ட 6 உத்தரகாண்ட் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் உத்தரகாண்ட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், குறைந்தது 17 பேரைக் காணவில்லை.

டிஜிவுக்

சுமார் 1,169 வீடுகளும் ஏராளமான விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ரிஷிகேஷ்-தேவ்பிரயாக்-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தெஹ்ரியில் உள்ள குஞ்சாபுரி பகர்தார் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் ரிஷிகேஷ்-சம்பா தேசிய நெடுஞ்சாலையிலும் தடைபட்டது. வெள்ளத்தால் சுமார் 1,169 வீடுகளும் ஏராளமான விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, டேராடூன் மற்றும் சம்பவாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இன்று மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மாவட்ட நீதிபதிகளும் மாநில பேரிடர் மீட்புப் படையும்(SDRF) மிகுந்த எச்சரிக்கையுடன் மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

இடிந்து விழுந்த டூன் பாதுகாப்பு கல்லூரியின் கட்டிடம்