
தென் கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்ற 'மோக்கா' புயல்
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
வடக்கு-வடமேற்கு திசையில் இது இன்று(மே.,11) இரவு தீவிர புயலாக மாறி நாளை(மே.,12) மிக தீவிர புயலாகவும் இது வலுபெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் இந்த புயலானது நகர்ந்து மே 14ம் தேதி முற்பகலில் தென்கிழக்கு வங்கதேசம்-மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த புயலானது ஈரப்பதத்தினை ஈர்த்தப்படி வடக்கு நோக்கி செல்கிறது என்பதால் வரும் நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | வங்கக்கடலில் உருவானது மோக்கா (Mocha) புயல்; இன்று இரவு தீவிர புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் வலுப்பெறும்
— Sun News (@sunnewstamil) May 11, 2023
வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என கணிப்பு
காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்தபடி வடக்கு நோக்கி…