நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடிவு - பீகார் முதல்வர் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை பாஜக'விற்கு எதிராக ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பாட்னாவில் இன்று(ஜூன்.,23) தேசியளவிலான எதிர்க்கட்சி கூட்டத்தினை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார். இவரின் அழைப்பினை ஏற்று 16 கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர்,"இன்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டமானது பயனுள்ளதாக அமைந்தது. வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலினை நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். விரைவில் மற்றொரு எதிர்க்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.