ஸ்ரீநகரில் விபத்து: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தததால் 10 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
இன்று(மே 30) காலை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 55 பேர் காயமடைந்தனர்.
அமிர்தசரஸில் இருந்து கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி அருகே அந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்த பகுதி ஜம்மு மாவட்டத்தின் கத்ராவிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.
பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ஜம்முவின் மூத்த காவல் கண்காணிப்பாளர்(SSP) சந்தன் கோஹ்லி கூறியுள்ளார்.
"10 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 55 பேர் காயமடைந்துள்ளனர். அனைவரும் வெளியேற்றப்பட்டு, மீட்பு நடவடிக்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. SDRF குழுவும் சம்பவ இடத்தில் உள்ளது" என்று SSP கூறி இருக்கிறார்.
details
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
துணை ராணுவக் குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு நிதியம்(SDRF), மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றிச் சென்றதாக பேருந்து ஓட்டுநர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
பேருந்தின் அடியில் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை பரிசோதிக்க கிரேன் கொண்டு வரப்பட்டது என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(CRPF) உதவி கமாண்டன்ட் அசோக் சவுத்ரி கூறியுள்ளார்.
"CRPF, காவல்துறை மற்றும் பிற குழுக்களும் இங்கு உள்ளன. ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடல்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பேருந்தின் அடியில் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை பார்க்க கிரேன் கொண்டு வரப்பட்டது." என்று அசோக் சவுத்ரி தெரிவித்துள்ளார்.