 
                                                                                மரங்கள் வெட்டியதை தட்டிக்கேட்ட தலித் வாலிபரின் அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்ட சம்பவம்
செய்தி முன்னோட்டம்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எட்டா மாவட்டத்தில் உள்ள சதேந்திர குமார்(32) என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் உள்ள விக்ரம் சிங் தாகூர், புரே தாக்கூர் உள்ளிட்ட 2 சகோதரர்கள் வெட்டியுள்ளனர். இதனை அந்த இடத்திற்கு உரிமையாளரான சதேந்திர குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உயர்ஜாதியை சேர்ந்த அந்த 2 சகோதரர்களும் தாழ்ந்த தலித் வாலிபரான சதேந்திர குமார் மற்றும் அவரது 4 மாத கர்ப்பிணி மனைவியான பூஜாவை தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்திற்குமேல் ஆத்திரம் அதிகரித்து அவர்கள் கத்தி மற்றும் கோடாரி கொண்டு சதேந்திர குமார் மற்றும் பூஜாவை தாக்கியுள்ளார்கள். அப்போது சதேந்திர குமாரின் அந்தரங்க உறுப்பானது வெட்டப்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.
விசாரணை
வழக்கு மீதான விசாரணை நடந்து வருகிறது
பின்னர், அந்த சகோதரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை அங்குவந்து சதேந்திரக்குமாரையும், பூஜாவையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து கூறிய சதேந்திரக்குமார்,"எனது அந்தரங்க உறுப்பினையறுக்க அவர்கள் முயன்றநிலையில், எனது அந்த உறுப்பின் பகுதியளவு மேல் வெட்டுக்காயம் ஏற்பட்டது. எனது 4மாத கர்ப்பிணி மனைவியையும் கோடாரி கொண்டு தாக்கினர். அதில் அவரது இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றோம். ஆனால் அவர்கள் எங்களை விரட்டிவந்து தாக்கினர். முதலில் இதுகுறித்த புகாரினை போலீசார் எடுக்கவில்லை. வழக்கறிஞர்மூலம் முறையிட்டப்பின்னரே அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். எனினும் எங்களுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வந்து கொண்டுதான் உள்ளது" என்று கூறியுள்ளார். தற்போது இந்த வழக்கு மீதான விசாரணை நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.