
சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா
செய்தி முன்னோட்டம்
ஒரு சிறுவனுக்கு தலாய் லாமா உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலானதை அடுத்து, தலாய் லாமா அந்த சிறுவனின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வைரலான ஒரு வீடியோவில், பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா ஒரு சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கிறார். அதன் பிறகு, தன் நாக்கை வெளியே நீட்டி அதை உறுஞ்சுமாறு அந்த சிறுவனிடம் கேட்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், தலாய் லாமா அந்த சிறுவனிடமும் அவனது குடும்பத்திடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதற்கு தலாய் லாமாவின் குழு, " அவர் சில நேரங்களில் சந்திக்கும் நபர்களை எந்த உள்நோக்கமும் இல்லாமல் விளையாட்டுத்தனமாக சீண்டி பார்ப்பார்." என்று பதிலத்துள்ளது.
இந்தியா
தலாய் லாமாவின் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்:
ஒரு சிறுவன் தலாய் லாமாவிடம் தன்னை கட்டிப்பிடிக்க முடியுமா என்று கேட்கும் வீடியோ ஒன்று சமீப காலமாக பரவி வருகிறது.
தனது வார்த்தைகள் ஏற்படுத்திய காயத்திற்காக அந்த சிறுவன், அவனது குடும்பத்தினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவனது நண்பர்களிடம், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எங்கள் புனிதர் விரும்புகிறார்.
பொது இடங்களிலும் கேமராக்களுக்கு முன்பும் கூட, அவர் சில நேரங்களில் சந்திக்கும் நபர்களை எந்த உள்நோக்கமும் இல்லாமல் விளையாட்டுத்தனமாக சீண்டி பார்ப்பார். நடந்த சம்பவத்திற்கு அவர் வருந்துகிறார். என்று கூறப்பட்டுள்ளது.