LOADING...
சீனா, பாகிஸ்தானுக்குச் செக்! 5 புதிய S-400 ஏவுகணைகள் மற்றும் 60 விமானங்கள் வாங்க டிஏசி ஒப்புதல் வழங்க வாய்ப்பு
S-400 மற்றும் டிரான்ஸ்போர்ட் விமானங்களுக்கு டிஏசி ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்

சீனா, பாகிஸ்தானுக்குச் செக்! 5 புதிய S-400 ஏவுகணைகள் மற்றும் 60 விமானங்கள் வாங்க டிஏசி ஒப்புதல் வழங்க வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
02:24 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஆயுதப் படைகளின் வலிமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சகத்தின் மிக உயரிய அமைப்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) இன்று (மார்ச் 27) கூடுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பல்லாயிரம் கோடி மதிப்பிலான அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யப் பச்சைக்கொடி காட்டப்பட உள்ளது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

சுதர்சன பாதுகாப்பு

S-400 சுதர்சன் ஏவுகணைகள்: வான் பாதுகாப்பு பலம்

இந்தக் கூட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, மேலும் 5 அலகுகள் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 4வது ஸ்குவாட்ரன் வரும் ஏப்ரல்-மே மாதங்களிலும், 5வது ஸ்குவாட்ரன் நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும் இந்தியா வரவுள்ளன. அதே நேரத்தில், டிஆர்டிஓ உருவாக்கி வரும் ப்ராஜெக்ட் குஷா என்ற உள்நாட்டு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து

60 நடுத்தர போக்குவரத்து விமானங்கள்

இந்திய விமானப்படை தனது பழைய விமானங்களுக்குப் பதிலாக 60 புதிய நடுத்தர போக்குவரத்து விமானங்களைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான போட்டியில் பிரேசிலின் எம்பிரேயர், அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ரஷ்யாவின் இலியுஷின் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இது இந்திய விமானப்படையின் தளவாடங்களைக் கொண்டு செல்லும் திறனைப் பலமடங்கு அதிகரிக்கும்.

Advertisement

ட்ரோன்கள் 

உள்நாட்டுப் போர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்

இந்திய விமானப்படைக்காகச் சுமார் 4 ஸ்குவாட்ரன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரிமோட் மூலம் இயக்கப்படும் போர் ட்ரோன்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. 800 கிமீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை அதிக எண்ணிக்கையில் வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. மேலும், எல்லைப் பகுதிகளில் தரைப்படையின் பலத்தை அதிகரிக்க, 300 உள்நாட்டுத் தயாரிப்பான தனுஷ் ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்குவதற்கான முன்மொழிவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புப் படைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்கும் இந்த உயர்மட்டக் கூட்டம், இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement