கரையை கடந்தது மிக்ஜாம் புயல்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
புயல் நிலவரம்: ஆந்திராவின் பாபட்லாவுக்கு அருகில் உள்ள நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே இன்று பிற்பகல் 12:30 மணியிலிருந்து தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய மிக்ஜாம் புயல், பிற்பகல் 2:30 மணியளவில் கரையை கடந்தது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் போது, 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
இன்றிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவுப்புகள்:
டிசம்பர் 5
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருவள்ளூர், இராணிப்பேட்டை
தக்ஜவா
டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 7
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 8
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
டிசம்பர் 9
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி
டிசம்பர் 10 மற்றும் டிசம்பர் 11
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.