
குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள்
செய்தி முன்னோட்டம்
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் துவங்கியுள்ளது.
அதன்படி அங்குள்ள ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.
இதனைத்தொடர்ந்து நேற்று(ஜூலை.,22) சனிக்கிழமை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தினை அதிகம் பார்க்க முடிந்தது.
அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும்(ஜூலை.,23) சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து அருவியில் குளிக்க அனுமதித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
குற்றால அருவியில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்
#WATCH | குற்றால அருவியில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்; விடுமுறை நாள் என்பதால்.. திரும்பும் திசையெங்கும் மக்கள் கூட்டம்..#SunNews | #Courtallam | #Waterfalls pic.twitter.com/g95yPsVJxB
— Sun News (@sunnewstamil) July 23, 2023