புனே போர்ஷே விபத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
போர்ஷே விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புனே சிறுவனை விடுவிக்க பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதோடு இந்த ரிமாண்ட் உத்தரவு சட்டவிரோதமானது என கூறி அதை ரத்து செய்துள்ளது.
நீதிபதிகள் பார்தி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நிவாரணம் வழங்கும் போது, விபத்து துரதிர்ஷ்டவசமானது என்றாலும், மைனர்களை கண்காணிப்பு இல்லத்தில் வைக்க முடியாது என்று கூறியது.
மைனரின் பெற்றோர் மற்றும் தாத்தா தற்போது சிறையில் இருப்பதால், இளைஞரின் காவல் அவரது தந்தைவழி அத்தைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு
இருவரை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் சிறுவன்
ஆகியோர் அடங்கிய அமர்வு, விபத்து துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அவரை கண்காணிப்பு இல்லத்தில் வைக்க முடியாது என்று கூறியது.
17 வயது இளைஞன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் போர்ஷே கார், மே மாதம் புனே நகரில் இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் ஒட்டி சென்ற பைக் மீது மோதியது.
இந்த வழக்கில் பைக்கில் பயணித்த அவர்கள் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவன், சிறார் நீதி வாரியம் (JJB) முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு சாலை பாதுகாப்பு குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத வேண்டிய நிபந்தனைகளில் ஒன்றின் கீழ் அதே நாளில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இது பெரும் சர்ச்சையை ஈர்த்தது.
உயர்நீதிமன்றம்
அத்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
"நாங்கள் மனுவை அனுமதித்து அவரை விடுவிக்க உத்தரவிடுகிறோம். CCL (சட்டத்துடன் முரண்பட்ட குழந்தை/மைனர்) மனுதாரரின் (தந்தைவழி அத்தை) கவனிப்பு மற்றும் காவலில் இருக்கும்" என்று நீதிமன்றம் கூறியது.
மேலும் சிறார் நீதிமன்றத்தின் ரிமாண்ட் உத்தரவுகள் சட்டவிரோதமானது மற்றும் அதிகார வரம்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்று பெஞ்ச் குறிப்பிட்டது.
சிறுவன் ஒரு கண்காணிப்பு இல்லத்தில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து அவரது அத்தையின் மனுவை நீதிமன்றம் விசாரித்து இந்த உத்தரவை வழங்கியது.
எனினும் விபத்து தொடர்பாக பதிவான பல்வேறு வழக்குகளில் சிறுவனின் பெற்றோர் மற்றும் அவரது தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.