மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் இதன் பரவல் மிக வேகமாக உள்ளது என்று கூறப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த இதன் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது தற்போது 3 இலக்கத்தில் பதிவாகி வருகிறது. இதன்படி கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 207 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு மொத்த பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,039ஆக உள்ளது என்று கூறப்படுகிறது. இது மட்டுமின்றி கேரளாவில் கொரோனா பாதிப்படைந்த ஒருவர் தற்போது பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க அம்மாநில அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.