Page Loader
இந்தியாவில் ஒரே நாளில் 96 கொரோனா பாதிப்பு
இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,93,282) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 96 கொரோனா பாதிப்பு

எழுதியவர் Sindhuja SM
Jun 16, 2023
12:45 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று(ஜூன் 15) 106ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 96ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 2,017ஆக சரிவடைந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும். இதுவரை, இந்தியாவில் 4.49 கோடி (4,49,93,282) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,893ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

BCJSDB

கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் ஜூன் 14ஆம் தேதி 120 பாதிப்புகளும், ஜூன் 13ஆம் தேதி 80 பாதிப்புகளும் ஜூன் 12ஆம் தேதி 92 பாதிப்புகளும், ஜூன் 9ஆம் தேதி 169 பாதிப்புகளும், ஜூன் 8ஆம் தேதி 199 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,59,372ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 146 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 220.6 கோடி கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன.