அடுத்த செய்திக் கட்டுரை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு
எழுதியவர்
Nivetha P
Jul 22, 2023
06:51 pm
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு குடிநீர் வழங்கல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கொடுக்கவேண்டிய பணப்பலனை வழங்காத அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கின் படி, நீதிமன்ற உத்தரவுகளை முறையாக நிறைவேற்றாமல் இருந்த குறிப்பிட்ட அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தினை சேர்ந்த ராஜேஷ் அய்யனார் முருகன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று(ஜூலை.,22) விசாரிக்கப்பட்டது.
அதன்படி அப்போதைய நகராட்சி நிர்வாக செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா அவர்கள் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி இத்துடன் முடிவடைந்தது