காங்கிரஸ் தலைவரின் மகள் கொலை: 'லவ் ஜிஹாத்' சம்பவம் என குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா கார்ப்பரேட்டரின் மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே பெரும் மோதலை தூண்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவரின் மகள் ஹுப்பாலியில் அவர் படித்த கல்லூரியின் முன்னாள் மாணவரால் ஏழு முறை கத்தியால் குத்தப்பட்டார்.
முன்னாள் மாணவரின் காதலை அந்த மாணவி ஏற்காததால் அவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேஹா ஹிரேமத்(23) என்பவர் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முதலாம் ஆண்டு மாணவி ஆவார்.
ஃபயாஸ் கோண்டுநாயக் என்பவர் அந்த மாணவியின் வகுப்புத் தோழராக முன்பு இருந்திருக்கிறார்.
இந்நிலையில், நேஹாவை ஃபயாஸ் ஏழு முறை கத்தியால் குத்தி கொன்றிருக்கிறார்.
விசாரணையின் போது, தானும் நேஹாவும் காதலித்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.
கர்நாடகா
லவ் ஜிகாத் கோணம் இருப்பதாக சந்தேகிக்கிறார் பிரகலாத் ஜோஷி
இந்த விவகாரம் ஆளும் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே அரசியல் மோதலாக மாறியுள்ளது. ஆளுங்கட்சி தனிப்பட்ட கோணத்தில் இதை ஒரு சம்பவமாக முன்னிறுத்த முயற்சித்தாலும், இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது என்று பாஜக கூறுகிறது.
மத்திய அமைச்சரும், தார்வாட் மக்களவை பாஜக வேட்பாளருமான பிரகலாத் ஜோஷி, இந்த சம்பவத்தின் பின்னணியில் லவ் ஜிகாத் கோணம் இருப்பதாக சந்தேகிக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், "குறிப்பிட்ட சமூகத்திற்கு" சிறப்பு சலுகை வழங்குவதை நிறுத்துமாறு முதல்வர் சித்தராமையாவிடம் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இந்த சம்பத்தின் லவ் ஜிகாத் கோணம் இல்லை என்று உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.