NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையில் நடைபெறும்": மல்லிகார்ஜுன கார்கே
    அடுத்த செய்திக் கட்டுரை
    "அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையில் நடைபெறும்": மல்லிகார்ஜுன கார்கே
    இந்த புதிய 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என்று பெயரிடப்பட்டுள்ளது.

    "அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையில் நடைபெறும்": மல்லிகார்ஜுன கார்கே

    எழுதியவர் Sindhuja SM
    Jul 18, 2023
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    2024ஆம் ஆண்டு பொது தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளை(NDA) எப்படி வீழ்த்துவது என்பதை திட்டமிட 26 எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று(ஜூலை 18) பெங்களூருவில் கூடினர்.

    இந்த புதிய 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி(INDIA) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, "INDIA-வை எதிர்க்க பாஜக தயாரா?" என்று பாஜகவுக்கு சவால்விட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் எங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம். நாங்கள் நாட்டின் தேசப்பற்றுள்ள மக்கள். நாடு, உலகம், விவசாயிகள் ஆகியோருக்காக தான் நாங்கள் இருக்கிறோம்." என்று கூறினார்.

    சிஜி

    "சிறுபான்மையின மக்களை பாஜக அச்சுறுத்துகிறது": மம்தா பானர்ஜி

    "மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூரில் உள்ள இந்துக்கள், தலித்துகள், சிறுபான்மையினர், விவசாயிகள் ஆகியோர் அரசுகளை வாங்குவதும் விற்பதுமாக இருக்கும் பாஜகவால் அச்சுறுத்தப்படுகிறார்கள்." என்றும் அவர் கூறினார்.

    அடுத்த எதிர்க்கட்சி கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும், அங்கு 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசினர்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விமானத்திற்கு விரைந்து செல்ல வேண்டி இருந்ததால் அவர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எதிர்க்கட்சிகள்
    காங்கிரஸ்
    மம்தா பானர்ஜி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பெங்களூர்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  அரசியல் நிகழ்வு
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  சோனியா காந்தி

    காங்கிரஸ்

    கர்நாடகாவில் புதிதாக பதவியேற்ற 9 அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்: ADR அறிக்கை இந்தியா
    லாரியில் பயணம் செய்து ஓட்டுனர்கள் பிரச்சனையினை கேட்டறிந்த ராகுல் காந்தி ராகுல் காந்தி
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    கர்நாடகாவில் நாளை 24 புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கிறார்கள் இந்தியா

    மம்தா பானர்ஜி

    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்  இந்தியா
    ராம நவமி வன்முறை குறித்து NIA விசாரிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு இந்தியா
    மம்தா பானர்ஜி பிரதமராக வேண்டும்: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025