
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
செய்தி முன்னோட்டம்
2019ம்ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் ராகுல் காந்தி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
இதற்காக அவர்மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து இன்று(மார்ச்.,23) அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையினை சூரத் நீதிமன்றம் விதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.
அதன்படி, சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோபண்ணா தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இது பொய்யான அவதூறு வழக்கு. மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கோபண்ணா கூறியுள்ளார்.
இதேபோல் தலைமை செயலகம் முன்பும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணைந்து சாலையில் அமர்ந்து தர்ணா செய்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
Tamil Nadu | Congress workers protest at Satyamurthy Bhavan headquarters in Chennai
— Economic Times (@EconomicTimes) March 23, 2023
Such undemocratic activity of BJP is motivated by malice, it is a false case of defamation. The public is watching everything: Congress leader AK Gopanna pic.twitter.com/V9duqvxZyU