நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து காங்கிரஸ் MP கார்த்தி சிதம்பரம் கருத்து
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார் என பல வருடங்களாக பேச்சு நிலவி வருகிறது. உச்சகட்டமாக, சென்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, அவரின் கட்சியின் பெயரை பதிவு செய்தார், விஜய்யின் தந்தை S.A.சந்திரசேகர். அதன் பின்னர் பல திருப்புமுனைகள், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி, அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளில், அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுமென தனது ரசிகர் மன்றத்தினருக்கு விஜய் அறிவுறித்தியதாக தெரிகிறது. அதை சார்ந்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதற்கு பதிலளித்துள்ளார் காங்கிரஸ் MP கார்த்தி சிதம்பரம். "தமிழகத்திற்கு தேவை வளர்ச்சி அரசியல். கவர்ச்சி, உணர்ச்சி அரசியல் அல்ல" என அவர் கூறியுள்ளார்.