Page Loader
மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் முழு அடைப்பு போராட்டம் 

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் முழு அடைப்பு போராட்டம் 

எழுதியவர் Sindhuja SM
Feb 04, 2024
10:34 am

செய்தி முன்னோட்டம்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளூர் மக்கள் நேற்று முழு அடைப்பைக் கடைப்பிடித்ததால், லடாக்கின் லே மாவட்டத்தில் மாபெரும் கண்டனப் பேரணிகள் காணப்பட்டன. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குதல், பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கைச் சேர்த்தல், உள்ளூர் மக்களுக்கு வேலை இட ஒதுக்கீடு வழங்குதல், லே மற்றும் கார்கிலுக்கு தலா ஒரு நாடாளுமன்ற இருக்கை வழங்குதல் ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.

லடாக்

போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கட்சிகள் 

லடாக் போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. லே அபெக்ஸ் பாடி (LAB) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (KDA) ஆகிய கட்சிகள், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையின் கீழ் அந்தஸ்து ஆகியவற்றைக் கோரி, ஜனவரி 23ஆம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. அதன் பிறகு, அந்த கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்காக 2019 ஆம் ஆண்டின் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவின் வரைவையும் பிரதிநிதிகள் சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.