Page Loader
'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 

'நாளை பாஜக அலுவலகத்திற்கு வருகிறேன்': தனது உதவியாளர் கைதுக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம் 

எழுதியவர் Sindhuja SM
May 18, 2024
06:28 pm

செய்தி முன்னோட்டம்

தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் "ஜெயில் பரோ" போராட்டத்தை அறிவித்துள்ளார். நாளை பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைமையகத்தில் மதியம் 12:00 மணியளவில் அனைத்து ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர்களும் கலந்துகொள்ளும் வகையில் போராட்டம் நடைபெறும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மே 13 ஆம் தேதி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தில் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியதைத் தொடர்ந்து பிபவ் குமாரை டெல்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

டெல்லி 

"நாங்கள் என்ன தவறு செய்தோம்?": டெல்லி முதல்வர்

இந்நிலையில், இது குறித்து பேசி இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், "அவர்கள் ஆம் ஆத்மி கட்சியை குறிவைக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. சஞ்சய் சிங்கை சிறையில் அடைத்தனர். இன்று என்னுடைய பிஏ-வை(பிபவ் குமார்) கைது செய்தனர். ராகவ் சதா லண்டனில் இருந்து திரும்பியுள்ளார்; சிலர் ராகவ் சதாவையும் கைது செய்ய இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு பிறகு இங்கே அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் மட்டுமே உள்ளனர்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். "நாங்கள் என்ன தவறு செய்தோம்? அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தியதுதான் எங்கள் குற்றமா?" என்று டெல்லி முதல்வர் கேள்வி எழுப்பினார்.