LOADING...
சென்னை, பெங்களூருவை ஓரம் கட்டும் 'நம்ம கோவை'! வேலைவாய்ப்பில் அதிரடி வளர்ச்சி; பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்
தமிழகத்தின் புதிய ஐடி ஜாம்பவான் கோவை

சென்னை, பெங்களூருவை ஓரம் கட்டும் 'நம்ம கோவை'! வேலைவாய்ப்பில் அதிரடி வளர்ச்சி; பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
03:39 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. நீண்ட காலமாக இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை என்பது பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களை மையப்படுத்தியே இருந்தது. ஆனால், 2026இல் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவை அமைதியாக ஒரு மிகப்பெரிய வேலைவாய்ப்புப் புரட்சியை உருவாக்கி வருகிறது. இங்கு வெறும் சம்பள உயர்வை மட்டும் பார்க்காமல், வேலைவாய்ப்புகள் எந்த வேகத்தில் பெருகுகின்றன என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.

முதலிடம்

ஏன் கோவை முதலிடத்தில் உள்ளது?

கோவை நீண்டகாலமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஜவுளி மற்றும் மோட்டார் உற்பத்தித் துறையில் உலகப் புகழ் பெற்ற கோவை, இன்று தனது பாரம்பரியத்தை நவீன ஐடி மற்றும் சேவைத் துறையுடன் வெற்றிகரமாக இணைத்துள்ளது. The Foundit Insights Tracker தகவல்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவையின் வேலைவாய்ப்பு வளர்ச்சி சுமார் 25% முதல் 30% வரை உயர்ந்துள்ளது. இது இந்தூர், ஜெய்ப்பூர் போன்ற இந்தியாவின் மற்ற வளர்ந்து வரும் நகரங்களை விடவும் முன்னணியில் உள்ளது.

மெட்ரோ நகரங்கள்

மெட்ரோ நகரங்களை விட கோவை ஏன் சிறந்தது?

சென்னையிலோ அல்லது பெங்களூருவிலோ ஒரு ஐடி ஊழியர் வாங்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை விட, கோவையில் வாங்கும் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிக நிம்மதியையும் உண்மையான பொருளாதாரச் சுதந்திரத்தையும் தரும். இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்கள்: பெருநகரங்களில் வாங்கும் சம்பளத்தின் 30% முதல் 40% வரை வாடகைக்கே செலவாகிவிடும். ஆனால் கோவையில் தரமான வீடுகள் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கின்றன. மளிகை முதல் போக்குவரத்து வரை அன்றாடச் செலவுகள் அனைத்தும் மெகா சிட்டிகளை விட 20% முதல் 25% வரை குறைவு. டிராஃபிக்கில் பல மணிநேரம் வீணாவதைத் தவிர்க்கலாம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, குடும்பத்துடன் செலவிட அதிக நேரத்தைத் தரும்.

Advertisement

வேலைவாய்ப்புகள்

புதிய வேலைவாய்ப்புகளின் மையம்

கோவையில் தற்போது டைடல் பார்க் மட்டுமின்றி, சரவணம்பட்டி, பீளமேடு போன்ற பகுதிகளில் ஏராளமான புதிய ஐடி பூங்காக்கள் மற்றும் 'குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள்' (GCC) உருவாகியுள்ளன. டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மேஷன் காரணமாக, பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது கிளைகளைக் கோவையில் தொடங்கி வருகின்றன. தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் பல கோவையில் இருப்பதால், நிறுவனங்களுக்குத் தேவையான திறமையான இளைஞர்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றனர்.

Advertisement

புத்திசாலித்தனமான முடிவு

புத்திசாலித்தனமான முடிவு எது?

இன்றைய இளைஞர்களுக்குச் சம்பளத்தை விட முக்கியமானது உண்மையான வருமானம் (Real Income). அதாவது செலவுகள் போக கையில் மிஞ்சும் பணம். அந்த வகையில், கோவை ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக அமைகிறது. அதிக சம்பளம் தரும் இடத்திற்கு ஓடுவதை விட, அதிக வாய்ப்புகள் பெருகும் மற்றும் அமைதியான வாழ்க்கை முறை கொண்ட கோவை போன்ற நகரங்களைத் தேர்ந்தெடுப்பதே 2026இன் புத்திசாலித்தனமான கேரியர் முடிவாக கருதப்படுகிறது. கோவையைப் போலவே இந்தூர், புவனேஸ்வர், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களும் தற்போது சிறந்த வேலைவாய்ப்புச் சந்தையை உருவாக்கும் நகரங்களாக உருவெடுத்துள்ளன.

Advertisement