Loading...
வளமான தமிழ்நாட்டை நோக்கிய வெற்றிப் பயணம் தொடரட்டும்! தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் விஜய் பெருமிதம்

வளமான தமிழ்நாட்டை நோக்கிய வெற்றிப் பயணம் தொடரட்டும்! தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் விஜய் பெருமிதம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 06, 2026
02:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு தனது முதல் திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட் 2026-27) சட்டமன்றத்தில் வெற்றிகரமாகத் தாக்கல் செய்துள்ளது. இதை "வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் வளர்ச்சியை முக்கிய இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்

பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையிலான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தனி வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த அமைச்சர் வினோத்திற்கும் முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Embed

ADVERTISEMENT

தொலைநோக்குத் திட்டங்கள்

அனைத்துத் தரப்பு மக்களுக்குமான தொலைநோக்குத் திட்டங்கள்

இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசுப் பணியாளர்கள் உட்படச் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

பொருளாதார மேம்பாடு

வேளாண்மை மற்றும் கிராமப்புறப் பொருளாதார மேம்பாடு

அதேபோல, வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது தமிழ்நாட்டின் விவசாய வளர்ச்சியோடு நிற்காமல், அது தொடர்பான கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில் துறைகளையும் மேம்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இது அனைத்துத் தரப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT