மகளிருக்கான இலவச பேருந்து விரிவாக்கம்! வெற்றி பயணம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கும் திட்டத்தின் விரிவாக்கமாக வெற்றி பயணம் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குவதையும், அவர்களின் தினசரி போக்குவரத்து செலவை கணிசமாக குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, மாநிலம் தழுவிய அளவில் இன்று முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
டிக்கெட் விநியோகம்
அரசுப் பேருந்தில் நேரில் பயணித்து கட்டணமில்லா டிக்கெட் விநியோகம்
இத்திட்டத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு, அரசுப் பேருந்தில் நேரில் ஏறிப் பயணம் செய்த முதலமைச்சர் விஜய், பேருந்தில் பயணித்த பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டுகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பேருந்தில் இருந்த பெண் பயணிகளிடம் இத்திட்டம் குறித்த அவர்களின் கருத்துகளையும், பேருந்து வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
முதலமைச்சரிடமிருந்து நேரடியாகக் கட்டணமில்லா டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்ட பெண்கள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
பயன்
12,692 பேருந்துகள் மற்றும் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறும் திட்டம்
வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 12,692 அரசுப் பேருந்துகள் சிறப்பு அடையாளக் குறியீடுகளுடன் இயக்கப்படவுள்ளன.
நகர்ப்புறம் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளிலும் இப்பேருந்து சேவைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என்றும், இதன் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் சிறு தொழில் செய்யும் மகளிர் பெரிதும் பயனடைவார்கள் என்றும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || மகளிருக்கு கட்டணமில்லா டிக்கெட் கொடுத்து வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய் | #TNNews | #Chennai | #CMJosephVijay | #VetriPayanamThittam | #TNGovt | #GirlsFreeBus | #PolimerNews pic.twitter.com/Q7xMPcEpOs
— Polimer News (@polimernews) October 2, 2026