தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு: திமுகவிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் புதிய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகைகளை அறிவித்தார். விவசாயிகளுக்குத் துணைநிற்கும் அரசு இருக்கும் நாடுதான் வளமாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தவெக அரசு பதவியேற்ற 15 நாட்களிலேயே விவசாயிகளின் நலனுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
தள்ளுபடி வரம்பு
பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பு மற்றும் நிதி ஒதுக்கீடு
சட்டமன்றத்தில் முதல்வர் உரையாற்றுகையில், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த விவரங்களை விரிவாகப் பட்டியலிட்டார்.
கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பெறப்பட்ட பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு, ரூ.75,000 வரை தள்ளுபடி சலுகை அளிக்கப்படும்.
இந்த புதிய பயிர்க்கடன் தள்ளுபடி சலுகையின் காரணமாக அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன் தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்துவதில் நீண்ட தாமதம் நிலவியதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தவெக ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை 60 நாட்களுக்குள் அரசு செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மன்னிப்பு
சட்டசபையில் நிலவிய பரபரப்பும் முதல்வரின் மன்னிப்பும்
முன்னதாகச் பேரவையில் 110 விதியின் கீழ் உரையைத் தொடங்குவதற்கு முன், திமுக உறுப்பினர்களைப் பார்த்துப் பேசிய முதலமைச்சர் விஜய், "உங்கள் கட்சித் தலைவரின் பெயரை அமைச்சர் குறிப்பிட்டது தவறுதான்; அமைச்சர் சார்பில் நான் மன்னிப்பு (Sorry) கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியது அவையில் பெரும் கவனத்தைப் பெற்றது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
. @TVKVijayHQ : அவர் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ! 🥺❤️#TNAssembly pic.twitter.com/ZUEf9gWWUJ
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 17, 2026