'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர்
தென்காசியில் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தென்காசிக்கு சென்றார். மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வரான பின் முதன் முறையாக நேற்று தான் தென்காசிக்குப் பயணித்திருக்கிறார். அவருக்காக சொகுசு வசதியுடன் கூடிய 'சலுான்' பெட்டி, பொதிகை ரயிலில் இணைத்து இயக்கப்பட்டது. அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் ஐ.பெரியசாமியும் இதில் பயணம் செய்திருக்கின்றனர். இந்த பெட்டியில் சொகுசு ஹோட்டல்களில் உள்ள அத்தனை வசதியும் இருக்கிறதாம்.
ரயிலா? நட்சத்திர ஹோட்டலா?
இந்த சலூன் ரயில் பெட்டி என்பது நகரும் வீட்டைப் போன்றது. இதற்குள் பாத்ரூமுடன் கூடிய 2 பெட்ரூம்கள், டைனிங் டேபிள், பெரியஹால், நாற்காலி, உட்கார சோபா, சமையலறை என்று அனைத்து வசதிகளும் இருக்கிறதாம். மேலும், இதில் இருக்கும் சமையலறையில் பண்ட பாத்திரங்கள், பிரிட்ஜ், RO குடிநீர், சுடுநீர் என ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான வசதிகள் இருக்கிறது. இதன் கட்டணம் என்ன தெரியுமா? ரூ.2 லட்சம்! ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருக்கும் அதிகரிகளுக்காகவே இந்த சலூன் பெட்டியை உருவாக்கி இருக்கிறது இந்திய ரயில்வே.