2 நாள் பயணமாக நெல்லை செல்லும் முதல்வர்; விழாக்கோலம் பூண்ட நகரம்
செய்தி முன்னோட்டம்
2 நாள் பயணமாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு செல்கிறார்.
அங்கு அவர் அரசு திட்டங்களை களஆய்வு செய்து, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் பரிசோதனைகளை மேற்கொள்வார்.
அதோடு முதல்வர் கங்கை கொண்டானில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாடா சோலார் தொழிற்சாலையை துவக்கி வைக்கிறார்.
நாளை, 5 கிலோ மீட்டர் ரோடு ஷோவை நடத்த உள்ளார்.
முதல்வரின் வருகையை ஒட்டி நெல்லை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விவரங்கள்
முதல்வரின் நெல்லை பயண விவரங்கள்
சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்கமாக நெல்லையை சென்றடைவார்.
கங்கைகொண்டான் சிப்காட் பகுதிக்கு சென்று 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ₹4,400 கோடி செலவில் கட்டப்பட்ட டாடா சோலார் தொழிற்சாலையை துவக்கி வைக்கிறார்.
அதோடு புதிய உணவு பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
பிறகு மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டையில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய காந்தி மார்க்கெட் வளாகத்தை திறந்து வைக்கிறார்.
நாளை 7ம் தேதி காலை, ₹9,368 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை துவக்கி, 75,151 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார் முதல்வர்.
நாட்டின் முன்னணி திட்டமாக தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு நதி நீர் இணைப்பு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.