
சென்னையில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம்: அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
செய்தி முன்னோட்டம்
சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அமெரிக்க சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது சென்னை சிறுசேரி சிப்காட்டில், 450 கோடி ரூபாய் முதலீட்டில், நோக்கியாவின் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சென்னை செம்மஞ்சேரியில் செமி கண்டக்டர் ஆராய்ச்சி மையம் அமைக்க மைக்ரோ சிப் நிறுவனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம்
#Brekaing | சென்னையில் அமைகிறது செம் கண்டெக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையம்!#SunNews | #Chennai | #MKStalinInUS | @TRBRajaa | @mkstalin pic.twitter.com/0OdctTbQuo
— Sun News (@sunnewstamil) August 30, 2024