சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்
உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முதற்கட்டமாக, சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பல பன்னாட்டுத் தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றினார். தொடர்ச்சியாக சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனைதொடர்ந்து சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கே உள்ள புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட என பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதற்கிடையே சிகாகோவில் சைக்கிளில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.