
சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை துவங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சுற்றுலா கழகம், புதிதாக 2 வால்வோ சொகுசு பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதன் மதிப்பு ரூ.2.92 கோடி என்று கூறப்படும் நிலையில், இன்று(நவ.,29) இப்பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன் சேவையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்த பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடத்தும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் முதன்முறையாக மாமல்லபுரத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையே கொடியசைத்து பேருந்து சேவையினை துவக்கி வைத்த முதல்வர், பேருந்துக்குள் ஏறி ஆய்வு செய்தார். மேலும் அதனுள் இருந்த மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசுப்பொருட்களையும் வழங்கியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சொகுசு பேருந்து
#JUSTIN | சொகுசு சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம்#cmstalin | #DMK | @mkstalin | #Mahabalipuram | #VolvoLuxurytouristbus | #NewsTamil24x7 pic.twitter.com/M32D9x2shH
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) November 29, 2023