முரசொலி செல்வம் மறைவு: மனமுடைந்த முதல்வர் ஸ்டாலின்; கலங்கி நின்ற உதயநிதி ஸ்டாலின்
முரசொலி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம், இன்று காலை பெங்களுருவில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எனவும், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையில் முரசொலி செல்வம் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Twitter Post
Twitter Post
முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது". "தலைவர் கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கட்சியிலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்! என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
கலங்கி நின்ற உதயநிதி ஸ்டாலின்
#Watch | முரசொலி செல்வம் மறைவு - கண்கலங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்#SunNews | #MurasoliSelvam | @Udhaystalin pic.twitter.com/l7tTzVHqNZ— Sun News (@sunnewstamil) October 10, 2024