'மாணவர்கள் மீது இனி வழக்கோ கைது நடவடிக்கையோ இல்லை': CJP -மத்திய அரசுடன் எட்டப்பட்ட உடன்பாடு
செய்தி முன்னோட்டம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சி(CJP) தெரிவித்துள்ளது. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்குவோம் என எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இந்த முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. CJP செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் எக்ஸ்(X) தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய அரசின் பிரதிநிதிகள் அக்கட்சியின் தலைவர்களை சந்தித்து சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுவது, கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது என உறுதி அளிக்கும் வரைவு அறிவிக்கைகள் பகிரப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Important: 1 AM update.
— Saurav Das (@SauravDassss) July 27, 2026
Hours after our press conference, Government’s representatives met us. The meeting lasted for 2-3 hours. They shared copies of the Bihar and Assam notifications guaranteeing FIR withdrawals, no action in future, and release of all detainees and… pic.twitter.com/G7WcHHcfAs
நடவடிக்கை
பீகார், அசாம் மாநிலங்களின் நடவடிக்கை
பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநில அரசுகள் இதுதொடர்பான உத்தரவாத அறிவிக்கைப் படிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மத்திய அரசு மற்றும் பிற பாஜக கூட்டணி ஆட்சி நடத்தும் மாநிலங்களும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கைகளை விரைவில் வெளியிடும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தொடர்ந்து, ஜூலை 25 அன்று 49 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இருப்பினும், மாணவர்களுக்கு எதிரான கண்காணிப்புகளும் கைது நடவடிக்கைகளும் தொடர்வதாகக் குற்றம்சாட்டி சிஜேபி மீண்டும் போராட்டம் நடத்த எச்சரித்திருந்தது.
மத்திய அரசின் இந்த புதிய வாக்குறுதிகள் மூலம் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.