Page Loader
CISF உயர்வு தினம் 2023: மார்ச் 12ஆம் தேதி கொண்டாட்டம்
இந்த ஆண்டு இது மார்ச் 12 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

CISF உயர்வு தினம் 2023: மார்ச் 12ஆம் தேதி கொண்டாட்டம்

எழுதியவர் Sindhuja SM
Mar 10, 2023
11:20 am

செய்தி முன்னோட்டம்

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) இந்தியாவில் உள்ள ஐந்து மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றாகும். 1969ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் சட்டத்தின் கீழ் CISF அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 ஆம் தேதி CISF உயர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு இது மார்ச் 12 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. CISF உயர்வு தினம் 2023, ஐதராபாத்தில் மார்ச் 12, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும். தேசிய தலைநகரான புது டெல்லிக்கு வெளியே CISF உயர்வு தினம் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்தியா

மார்ச் 10, 1969 நிறுவப்பட்ட CISF

பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் முதன்மை நோக்கத்துடன் மார்ச் 10, 1969 அன்று பாராளுமன்ற சட்டத்தின் கீழ் CISF நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், இது மூன்று பட்டாலியன்கள் மற்றும் 2,800 பணியாளர்களுடன் தொடங்கியது. தற்போது, CISF ஆனது 1,65,000 பணியாளர்களுடன் நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. CISF உயர்வு தினம் நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களில் அணிவகுப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள CISF பிரிவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பிற நிகழ்வுகளும் அடங்கும். இந்த நாளில் CISF அதன் சிறந்த மற்றும் துணிச்சலான பணியாளர்களை கவுரவிக்கும்.