வீட்டுக்குள் புகுந்து 2 குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு
உத்தரபிரதேச மாநிலம் புடாவுனில் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளை ஒருவர் கொன்ற இரட்டைக் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி என்று கூறப்படும் சஜித், பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு எதிரே முடிவெட்டும் கடை நடத்தி வந்தார். கொல்லப்பட்ட குழந்தைகளின் தந்தை வினோத்தை சஜித்துக்கு நன்றாக தெரியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, சஜித் 5000 ரூபாய் கடன் வாங்குவத்த்தற்காக வினோத்தின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால், அந்த நேர்தத்தில் வினோத் தனது வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் மட்டுமே வீட்டில் இருந்திருக்கின்றனர். வினோத்தின் மனைவி டீ போடுவதற்காக சமயலறைக்கு சென்ற போது, சஜித், வினோத்தின் 3 குழந்தைகளையும் தாக்கி இருக்கிறார்.
இரட்டைக் கொலை சம்பவம் நடந்த விவரங்கள்
இந்த இரட்டைக் கொலை சம்பவம் அந்த நகரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள குடியிருப்பாளர்கள் சஜித்தின் முடிவெட்டும் கடைக்கு தீ வைத்துள்ளனர். வினோத்தின் மனைவி சமையலறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, வினோத்தின் மூத்த மகனான 11 வயது ஆயுஷிடம், சஜித், மாடியில் இருக்கும் அவனது தாயின் அழகு நிலையத்தைக் காட்டச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுவன், சஜித்தை இரண்டாவது மாடிக்கும் அழைத்துச் சென்றான். அப்போது, விளக்குகளை அணைத்த சாஜித், ஆயுஷை கத்தியால் குத்தி கிழித்தார். சஜித் ஆயுஷின் கழுத்தை அறுத்து கொண்டிருந்த போது, ஆயுஷின் இளைய சகோதரன் அஹான்(6) இரண்டாவது மாடிக்குள் நுழைந்தான். உடனே, சஜித், அஹானையும் குத்தி கொன்றார். வினோத்தின் மற்றோரு மகனான பியூஷ் மட்டும் தப்பியோடி மறைந்துகொண்டான்.
சஜித்தை என்கவுண்டரில் கொன்ற காவல்துறை
இதனால், ஆயுஷ் மற்றும் அஹான் ஆகியோர் உயிரிழந்தனர். ஆனால் பியூஷுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அதன் பின், தப்பியோடிய சஜித் வெளியில் பைக்கில் காத்திருந்த அவரது சகோதரர் ஜாவேத்துடன் தப்பி ஓடிவிட்டார் என்று அந்த குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சஜித் மற்றும் ஜாவேத் இருவரும் தான் இந்த குற்றத்திற்கு காரணம் என்று வினோத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சஜித் பிடிபட்டபோது, அவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், அதன் பின் அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஜாவேத் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், தங்களுக்கு இடையே தகராறு எதுவும் இல்லை என வினோத் மறுத்துள்ளார்.