
இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு
செய்தி முன்னோட்டம்
எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை சந்தேகிக்கும் வகையிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உள்கட்டமைப்பு வலிமையை எடுத்துக்காட்டும் வகையிலும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேசிய சமீபத்திய கருத்துக்கள் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ப.சிதம்பரம், 2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.
மேலும், இதை சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாஜகவின் ஆதிக்கம் 2029க்கு பிறகும் தொடரும் என்று எச்சரித்தார்.
எனினும், குறைகளை சரிசெய்து, ஒன்றிணைப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், அதை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பாஜக
பாஜகவினர் கருத்து
பாஜக தலைவர்கள் அவரது கருத்துக்களை விரைவாக விவாதப் பொருளாக்கினர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ப.சிதம்பரத்தின் உரையின் வீடியோவை வெளியிட்டார்.
வீடியோவை வெளியிட்டு, இது காங்கிரஸ் கட்சியினர் கூட எதிர்க்கட்சிகளின் எதிர்காலத்தை சந்தேகிக்கிறார்கள் என்பதை நிரூபித்ததாகக் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய பாஜக கேரள தலைவருமான ராஜீவ் சந்திரசேகர், இந்தியா கூட்டணியை ஊழல் மீதான அன்பால் ஒன்றுபட்ட வண்ணமயமான தொகுப்பு என்று குறிப்பிட்டார்.
பாஜகவின் தேர்தல் பலத்தை எதிர்கொள்ள 2023 இல் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, குறிப்பாக ஹரியானா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் உள் மோதல் மற்றும் குறைந்த வெற்றியைக் கண்டுள்ளது.
மாநில தேர்தல்கள்
கூட்டணியின் வலிமையை சோதிக்கும் மாநில தேர்தல்கள்
இதற்கிடையே, பீகார் (2025), மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு (2026) மற்றும் உத்தரபிரதேசம் (2027) ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் முக்கிய மாநிலத் தேர்தல்கள் இந்த கூட்டணியின் ஒற்றுமையை சோதிக்கும் களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரத்தின் கருத்துக்கள் ஒரு மூலோபாய எச்சரிக்கையாக வருகின்றன.
2029 இல் பாஜக தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இந்த கருத்து எதிர்பார்க்க வைத்தாலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
எனினும், சிதம்பரத்தின் கருத்து குறித்து காங்கிரஸ் தலைமை எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.