
கனமழை எதிரொலி - ஒத்திவைக்கப்பட்டது சென்னை பல்கலைக்கழக தேர்வுகள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்து மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.
தொடர்ந்து, இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாகவும் மாநிலம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நேற்று(நவ.,30) காலை துவங்கிய மழை பகல் முழுவதும் ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், மாலை நேரம் துவங்கி இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலை முழுவதும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்தனர்.
தேர்வு
தேர்வுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும்
இதனை தொடர்ந்து சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று நேற்றே அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இன்று(நவ.,30) காலை முதல் மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், கிண்டி, ஆலந்தூர், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனிடையே தொடரும் கனமழை காரணமாக சென்னை பகலைக்கழகத்தில் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், தற்போது ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் வேறு எந்த தேதியில் நடத்தப்படும் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்த அறிக்கையினை சென்னைன்னை பல்கலைக்கழக துணை வேந்தரான பேராசிரியர் ஆர்.தாண்டவன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.