
சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை
செய்தி முன்னோட்டம்
வந்தே பாரத் ரயில்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அதிவேக ரயில்களாகும்.
இதுவரை இந்த ரயில் சேவை நாட்டின் 23 ரயில் தடங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
தற்போது, சென்னையில் இருந்து மைசூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு இடங்களுக்கு மட்டுமே வந்தே பாரத் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி ரயில் நிலையத்திற்கு ஒரு புதிய வந்தே பாரத் ரயில் இந்த மாதம் தொடங்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிபி
தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு இயங்கப்பட இருக்கும் முதல் வந்தே பாரத் ரயில்
இந்த மாதம், சென்னை - திருப்பதி, ஜோத்பூர்-சபர்மதி மற்றும் கோரக்பூர் - லக்னோ ஆகிய மூன்று ரயில் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியா முழுவதில் இருந்ததும் திருப்பதிக்கு வருகிறார்கள்.
அதனால், திருப்பதி கோவிலுக்கு நாடு முழுவதில் இருந்தும் பல சாதாரண ரயில்கள் ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கிறது.
ஆனால், திருப்பதிக்கு இதுவரை ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் தெலுங்கானாவின் செகந்தராபாத்தில் இருந்து திருப்பதி ரயில் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது.
சென்னை-திருப்பதி வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டால், தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலாக அது இருக்கும்.