NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை-இதய சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு கை அகற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை-இதய சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு கை அகற்றம் 
    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை-இதய சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு கை அகற்றம்

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை-இதய சிகிச்சை பெற வந்த பெண்ணிற்கு கை அகற்றம் 

    எழுதியவர் Nivetha P
    Sep 27, 2023
    01:49 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இதய சிகிச்சைப்பெற வந்த பெண்ணின் வலது கை அகற்றப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியினை சேர்ந்தவர் ஜீனாத்.

    இவரது மனைவி ஜோதி(32), இவர் நெஞ்சுவலி காரணமாக கடந்த சிலத்தினங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

    இவருக்கு ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளதா? என்பதை கண்டறிய ஆஞ்சியோ சிகிச்சையளித்த மருத்துவர்கள், பெரியளவில் ரத்தநாள அடைப்பு ஏதுமில்லை என்று கூறியுள்ளனர்.

    அதே சமயம், ஜோதிக்கு ரத்தம் உறைந்த காரணத்தினால் அவரது வலது கை மற்றும் 2 கால்கள் மிகவும் கருப்பாகி மோசமான நிலையில் காணப்பட்டுள்ளது.

    குற்றச்சாட்டு

    மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு 

    இதனால் மருத்துவர்கள் உயிரினை காப்பாற்ற வேண்டும் என்னும் காரணத்தினால் அவரது வலது கையினை நேற்று(செப்.,26)அகற்றியுள்ளனர்.

    இந்நிலையில் இதுகுறித்து ஜீனாத், "தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சைக்கு அதிக கட்டணம் என்பதால் தான் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு ஆஞ்சியோ செய்த மருத்துவர்கள் ரத்தநாளத்தில் அடைப்பு ஏதுமில்லை என்று கூறிவிட்டு, ரத்தம் உறைந்த காரணத்தினால் வலது கையினை அகற்றியதாக கூறுகிறார்கள்" என்றும்,

    "மேலும் ரத்த உறைதல் சீராகவில்லை என்றால், இடது காலையும் அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்"என்று வேதனை தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அவர், இதயப்பரிசோதனைக்கு வந்தவருக்கு கையினை அகற்றுகிறார்கள் என்றும், மருத்துவர்களின் கவனக்குறைவு அல்லது தவறான சிகிச்சை தான் இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும் தனக்கு நியாயம் வேண்டும் என்றும் கோருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசு மருத்துவமனை
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்

    சென்னை

    சென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு ஐஐடி
    'மெட்ராஸ் வாரம்' கொண்டாட்டம் - திருவான்மியூர் கடற்கரையில் 'மூன் லைட் சினிமா' கடற்கரை
    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஓணம்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  இசை வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025