புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; பைக் ரேஸ், பட்டாசு உள்ளிட்டவைகளுக்கு தடை
செய்தி முன்னோட்டம்
2025ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைதியான முறையில் கொண்டாட்டங்கள் நடைபெறுவதை உறுதி செய்ய சென்னை காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், 19,000 காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான மற்றும் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாட நெறிமுறைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
காவல் துறையினரின் அறிவுரையின் படி, முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, முக்கிய நகராட்சிகளில் 425 இடங்களில் வாகன தணிக்கைகள், 30 சாலை பாதுகாப்பு குழுக்கள், மற்றும் 30 கண்காணிப்பு சோதனை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடு - சென்னை மாநகரக் காவல்துறை அறிக்கை!#SunNews | #NewYear2025 | #Chennai pic.twitter.com/SyPHRj8qp3
— Sun News (@sunnewstamil) December 30, 2024
தடை
பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள்
இருசக்கர வாகன பந்தயங்கள் (Bike Race) தடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. நாளை மாலை முதல் கடற்கரை பகுதிகளில், குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பொதுமக்களும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல், ஒத்துழைப்புடன் 2025ஆம் ஆண்டை தொடங்குமாறு சென்னை காவல்துறை சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.