சென்னையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் குறித்து மக்கள் கருத்து
சென்னையின் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கலில் பொது மக்கள் குறையினை தீர்க்க 'மக்களை தேடி மேயர்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சி மண்டலங்களில் 1 முதல் 15 வரையுள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பது பொருட்டு, மேயர் மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு மண்டலத்திற்கு நேரில் சென்று மக்களிடம் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார். இந்த திட்டடமானது வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை சென்னை மக்கள் வரவேற்றாலும், மேயர் குறைந்தபட்சம் 3 அல்லது 4 வார்டுகளை இணைத்து கூட்டத்தினை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சமூக ஊடக தளங்களிலும் மேயர் செயலில் இருக்க வேண்டும்
இதனையடுத்து, சென்னையில் ஒவ்வொரு மண்டலமும் அதன் கட்டுப்பாட்டில் 10-14 வார்டுகள் கொண்டுள்ளது. மேயர் நேரில் சந்தித்து பேச பலருக்கும் விருப்பம் இருக்கும். ஒவ்வொரு மாதமும் மண்டல அலுவலகங்களில் கூட்டம் நடத்தினால் எங்களால் மனுக்களை மட்டும் தான் கொடுக்க முடியும். எங்கள் குறைகளை கூறி உரையாட முடியாது. எனவே மாதத்திற்கு 2 முறை 3 அல்லது 4 வார்டுகளை ஒருங்கிணைத்து குடிமை அமைப்பினர் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். அதே போல் மாவட்ட மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரின் வாட்ஸ் அப் எண்களுக்கு புகார் அளித்துள்ளோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சமூக ஊடக தளங்களிலும் மேயர் செயலில் இருக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.