Loading...
சென்னையில் நாளை PDS குறைதீர் முகாம்: ரேஷன் கார்டு திருத்தங்கள் மற்றும் கேஸ் இணைப்பு சிக்கல்கள் தீர்க்க அணுகலாம்
சென்னையில் நாளை PDS குறைதீர் முகாம்

சென்னையில் நாளை PDS குறைதீர் முகாம்: ரேஷன் கார்டு திருத்தங்கள் மற்றும் கேஸ் இணைப்பு சிக்கல்கள் தீர்க்க அணுகலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2026
04:45 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) சேவைகளை மக்கள் எளிதாகப் பெறும் வகையில், அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் நாளை நடைபெறவுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இக்குறைதீர் முகாம் நடைபெறும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சேவைகள்

முகாமில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்

ரேஷன் அட்டைகளில் புதிய பெயர்களைச் சேர்த்தல், பெயர்களை நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் மற்றும் தொலைபேசி எண்களைப் பதிவு செய்தல்/மாற்றுதல்.

ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருட்கள் பெற அங்கீகாரச் சான்று வழங்குதல்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான புகார்களைத் தெரிவித்துத் தீர்வு காணுதல்.

முக்கியக் குறிப்பு:சான்றிதழ் திருத்தங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் OTP மூலமே மேற்கொள்ளப்படும் என்பதால், பொதுமக்கள் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போனை எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ADVERTISEMENT