Loading...
நாளை முதல் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்
நாளை முதல் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்

நாளை முதல் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை நேரத்தில் மாற்றம்

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
01:26 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வழியாக வடபழனி வரையிலான மஞ்சள் வழித்தடத்தில், நாளை முதல் காலை நேர மெட்ரோ ரயில் சேவைத் தொடங்கும் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2026-இல் இந்த வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டு தற்போது காலை 6:00 மணி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை முதல் வழக்கமான காலை 6:00 மணிக்குப் பதிலாகக் காலை 7:00 மணிக்குத்தான் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 புதிய நிலையங்களின் பணிகள்

ஓட்டுநர் இல்லா ரயில் சோதனைகளை விரைவுபடுத்த மாற்றம்

போரூர் சந்திப்பு மற்றும் வடபழனிக்கு இடைப்பட்ட பகுதியில் ஆலப்பாக்கம் சந்திப்பு, காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் கிழக்கு மற்றும் சாலிகிராமம் உட்பட இன்னும் பயன்பாட்டிற்கு வர வேண்டிய 7 புதிய மெட்ரோ நிலையங்களின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் ஒரு மணி நேரம் கூடுதல் பணி நேரம் கிடைப்பதன் மூலம், நிலையங்களின் நுழைவு வாயில் அமைக்கும் பணிகளுடன் தானியங்கி சிக்னல் அமைப்பு மற்றும் ஓட்டுநர் இல்லா ரயில் இயக்கச் சோதனைகளைத் தடையின்றி விரைவாக மேற்கொள்ள முடியும் என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

புதிய ரயில் நிலையங்கள் எப்போது திறக்கப்படும்?

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுவரை காலை 7:00 மணிக்கு தொடங்கும் இந்த நேர மாற்றம் தொடரும் எனக் கூறப்படுகிறது.

கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, பாதுகாப்புச் சான்றிதழ் பெற்றுப் புதிய ரயில் நிலையங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க ஜூன் அல்லது ஜூலை மாதம் ஆகக்கூடும் என மெட்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்கள் இந்த நேர மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT