கிருஷ்ண ஜெயந்தி 2024: சென்னை மெட்ரோ ரயில் முக்கிய அறிவிப்பு
எழுதியவர்
Sekar Chinnappan
Aug 25, 2024
06:48 pm
செய்தி முன்னோட்டம்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவித்துள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். அதில் காலை 5 முதல் 8 மணி வரை, முற்பகல் 11 முதல் மாலை 5 வரை மற்றும் இரவு 8 முதல் 10 வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ஒரு மெட்ரோ இயங்கும். காலை 8 முதல் 11 வரை, மாலை 5 முதல் இரவு 10 வரை ஒவ்வொரு 6 நிமிடத்திற்கும் ஒரு மெட்ரோ மற்றும் இரவு 10 முதல் 11 வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு மெட்ரோ இயக்கப்படும்.
ட்விட்டர் அஞ்சல்