NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம் 
    சென்னை போக்குவரத்து மாற்றம்

    மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம் 

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம், ஆலந்தூர் வழியாக ஒரு வழித்தடமும், நந்தனம், சைதாப்பேட்டை வழியாக மற்றொரு வழித்தடமும் இயக்கப்பட்டு வருகின்றன.

    மொத்தம் 54 கிலோமீட்டர் தூரத்திற்கு இயங்கும் இவற்றில், தற்போது மாதம் 80 லட்சம் பயணிகள் பயணம் செய்வதாக கூறப்படும் நிலையில், மெட்ரோ சேவையை விரிவாக்குவதற்கான பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன.

    இந்த இரண்டாம் கட்ட பணியில் குறிப்பாக புறநகர் பகுதிகளை சென்னையின் மையப்பகுதியுடன் இணைக்கும்படி கட்டமைக்கப்பட்டு வருகிறது.

    காரம்பாக்கம்

    காரம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள்

    இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட கட்டுமானத்தில் காரம்பாக்கத்தில் மெட்ரோவுக்கான தூண் அமைக்க ராட்சத கிரேன் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதையொட்டி, போரூரில் இருந்து வளசரவாக்கம் வழியாக வடபழனி செல்லும் ஆற்காடு சாலை மூடப்பட்டுள்ளது.

    அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த சாலை மூடப்பட்டிருக்கும். காரப்பாக்கம் போலீஸ் பூத் அருகே இடது புறமாக செல்லக்கூடிய வாகனங்களை ராஜேஸ்வரி சாலை வழியாகவும், ஆலப்பாக்கம் சாலை வழியாக செல்லும் வாகனங்களை ஆற்காடு சாலைக்கும் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, சமீபத்தில் சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மேடவாக்கம் கூட் ரோடு முதல் வானுவம்பேட்டை வரையில் பணிகள் நடைபெற்றதால், போக்குவரத்து திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மெட்ரோ
    போக்குவரத்து

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19 வணிகம்
    ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 680 ரூபாய் சரிந்தது  தங்கம் வெள்ளி விலை
    ஒரே வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்தது   தங்கம் வெள்ளி விலை
    தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை

    மெட்ரோ

    நள்ளிரவு வரை மெட்ரோ சேவைகளை தொடர சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு? சென்னை
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு சென்னை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மதுரை
    திருமங்கலம் மெட்ரோ பயணிகளுக்காக மினி பஸ் மற்றும் மின்சார ஆட்டோ சேவை அறிமுகம்  சென்னை

    போக்குவரத்து

    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் தமிழக அரசு
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025