LOADING...
சென்னை போரூர் - பூந்தமல்லி மெட்ரோ: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்
ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மெட்ரோ ரயில்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை போரூர் - பூந்தமல்லி மெட்ரோ: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 17, 2025
03:53 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், போரூர் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன. ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மெட்ரோ ரயில்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த வழித்தடத்தில் ரயில்களின் சோதனை ஓட்டம் மற்றும் சிக்னல் சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

விவரங்கள்

இந்த வழித்தடத்தில் அமையவுள்ள முக்கிய நிலையங்கள்

போரூர் மற்றும் பூந்தமல்லி இடையே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. இது முழுமையாக மேம்பாலப் பாதையாக (Elevated Track) அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் போரூர், போரூர் சந்திப்பு, ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கராஞ்சாவடி மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் பணிகள் மிக வேகமாக முடிக்கப்பட்டுள்ளதால், ஜனவரி 2026-ல் இது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இரண்டாம் கட்ட திட்டத்தில் முதலில் திறக்கப்படவுள்ள வழித்தடமாகும். இந்த வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள ரயில்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டுநர் இல்லாத (Driverless) ரயில்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Advertisement