காந்தி ஜெயந்தி : இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்
இன்று அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பயணிகள் பயன்பாடும் குறைவாக இருக்கும் என்பதாலும், விடுமுறை என்பதாலும், ஞாயிறு கால அட்டவணை பின்பற்றப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மெட்ரோ ரயில்கள் அதன் சேவையை காலை 05:00 மணி துவங்கும் எனவும், இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12 மணிக்கு துவங்கி, இரவு 8 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கும் ரயில் சேவைகள் இருக்கும் எனவும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவேளையில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.