Page Loader
சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு
சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு

எழுதியவர் Nivetha P
Apr 01, 2023
07:47 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீ நாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் போலீஸ் கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றது. ஆனால் கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். ஆனால் அப்போது கல்லூரி இயக்குநர், துணைஇயக்குநர் விடுப்பில் இருந்ததால் அவர்களை திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் ஆஜராக உத்தரவு