
சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.
அதன்படி சென்னை ஐஐடி'யிலும் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
அதன்படி தற்போது, பிடெக் படித்து வரும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் என்னும் மாணவர் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விடுதி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
அதன்பேரில் அங்கு சென்ற கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவோ, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாகவோ தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
#BREAKING சென்னை ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை#IIT #Chennai #suside #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/6iF3eqeDh6
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 14, 2023