NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம் 
    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம் 
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Apr 26, 2023
    08:04 pm
    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம் 
    கோடை காலம் என்பதால் வழக்கறிஞர்கள் கவுன் அணிவதில் விலக்கு - சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கோடை காலம் துவங்கி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனையடுத்து கோடை காலத்தில் கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு மற்றும் வெள்ளை உடைக்கு மேல் கருப்பு நிறத்தில் கோட், கழுத்தில் வெள்ளை நிறத்தில் ஒரு பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்றை அணிந்து ஆஜராக வேண்டும் என்பது விதிகளில் ஒன்று. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பார் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தாண்டு துவக்கத்தில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது.

    2/2

    ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை விலக்கு 

    இந்த கோரிக்கையானது அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    சென்னை உயர் நீதிமன்றம்
    தமிழ்நாடு

    சென்னை

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  ரயில்கள்
    சென்னை கலாஷேத்ரா விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    தொடர்ச்சியாக உயரும் தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  வணிக செய்தி
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  விமான சேவைகள்

    சென்னை உயர் நீதிமன்றம்

    செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு கோலிவுட்
    சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்  சென்னை
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு - உயர்நீதிமன்றங்களில் முகக்கவசம் கட்டாயம் கொரோனா

    தமிழ்நாடு

    சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR  உதயநிதி ஸ்டாலின்
    பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!  ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023