சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
கனமழை காரணமாக ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது.
டெர்மினல்கள் பராமரிப்பு, போக்குவரத்து மேலாண்மை, டிராலிகள் கிடைப்பது மற்றும் இதர அனைத்து வசதிகளையும் சரியான முறையில் பராமரிப்பதை உறுதி செய்ய விமான நிலையக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை குறைந்திருந்தாலும், பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் உள்ள 17 சுரங்கப்பாதைகள் இன்றும் மூடப்பட்டுள்ளது.
மின்சாரம் சில பகுதிகளில் திரும்பி இருந்தாலும், சென்னையில் பல்வேறு இடங்களில் செல்போன் நெட்வொர்க் கிடைக்காமல் மக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
சென்னை முழுவதும் வழக்கமாக 2700 பேருந்துகள் இயங்கும் நிலையில், இன்று 1000 மட்டும் இயக்கப்பட உள்ளது. நேற்று 320 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
டவ்க்ஜன்
சென்னையில் மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள்
ஜெ.ஜெ. நகர், சாந்தி காலனி, அண்ணா நகர், சேத்துப்பட்டு , SAF Games village, ஸ்பார்ட்டன் நகர், கலெக்டர் நகர், குமரன் நகர், மூர்த்தி நகர், சர்ச் சாலை, அடையாளம்பட்டு, S&P பொன்னியம்மன் நகர், அண்ணா சாலை, கிரிம்ஸ் ரோடு, நுங்கம்பாக்கம், ஸ்பென்சர் பிளாசா, பூக்கடை, சிந்தாதிரிப்பேட்டை, இராயப்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் தலைமைச் செயலகம், CMBTT, ICF, இந்தியா பிஸ்டன், கீழ்பாக்கம், மணலி, நியூகொளத்தூர், பேப்பர்மில்ஸ் ரோடு, பெரியார் நகர், ஆழ்வார் திருநகரின் ஒரு பகுதி, கிண்டி, இராமாபுரம், இராமசாமி சாலை, செயின்ட் தாமஸ் மவுண்ட், வடபழனி, கெருகம்பாக்கம், போரூர், பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், தொட்டியம்பாக்கம், கடப்பேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.