Page Loader
காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்
தமிழகத்தின் காலை சிற்றுண்டி திட்டம் - தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றம்

காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்

எழுதியவர் Nivetha P
Nov 29, 2023
08:23 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டமானது மேயர் பிரியா தலைமையில் இன்று(நவ.,29) காலை ரிப்பன் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆணையாளர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தின் கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் மேயர் பிரியா. அதன் பின்னர் இக்கூட்டத்தில் 43 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனுள் ஒன்று தான், சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் தனியார் நிறுவனங்கள் கொண்டு வழங்குவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் ஆகும். இதில் சென்னை மாநகராட்சியின் வசமுள்ள மொத்தம் 358 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சென்னை 

தனியார் நிறுவன ஒப்பந்தத்திற்க்கு சில விதிமுறைகள் வகுக்கப்படுகிறது 

இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஓராண்டிற்கு காலை உணவு அளிக்க ரூ.19 கோடி செலவாகும் பட்சத்தில் 6,530 மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இப்பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்ய துணை ஆணையர் சரண்யா அரி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும். கால தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பு, சுத்தமாக சமையல் கூடம் பராமரித்தல் வேண்டும், தவறினால் அபராதம், தவறு தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து, அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு வகைகள் வழங்குதல் உள்ளிட்ட சில விதிமுறைகள் வகுக்கப்படவுள்ளது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை மாநகராட்சி